விஜயகாந்த் மகனுடன் நடிக்க தயார்: ராகவா லாரன்ஸ்.!

Vijayakanth - Raghava Lawrence

நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன, நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் லாரன்ஸ் தனது தாயாருடன்சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதோடு, விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றிருந்தார். அப்போது, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு உதவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதனையேற்று சண்முகப் பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தில் கெஸ்ட் ரோல் செய்ய சம்மதம் என்று லாரன்ஸ் அறிவித்திருக்கிறார்.

மேலும் அந்தப் படத்திற்கு விளம்பரம் செய்து கொடுக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அதாவது, இது தொடர்பாக லாரன்ஸ் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நான் தயார்” என உருக்கமக பேசியுள்ளார்.

பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – நடிகை நயன்தாரா அட்வைஸ்!

சண்முக பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்த அளவுக்கு இந்த திரைப்படம் புகழை தேடி தரவில்லை. இதனால், அடுத்த கட்டத்திற்கு போவதற்கு அவர் காத்திருக்கும் நிலையில், அதற்கு ராகவா லாரன்ஸ் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்