அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடைசியாக மத்தகம் வெப் சீரிஸில் நடித்திருக்கும் மணிகண்டன், முன்னதாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரு காதல் குடும்ப திரைப்படமாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஜெய் பீம் வெற்றியை தொடர்ந்து குட் நைட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மணிகண்டனுக்கு இப்படம் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் கல்லுரியில் நடைபெறும் காதல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சத்தமில்லாமல் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.
இது குறித்து அறிவிக்கும் வகையில், படக்குழு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. இயக்குனராக அறிமுகவிருக்கும் வியாஸ் இதற்கு முன்பு கண்ணா ரவி மற்றும் அம்ருதா ஸ்ரீனிவாஸ் முக்கிய வேடங்களில் நடித்த பிரபலமான யூடியூப் தொடரான லிவின் என்ற தொடரை இயக்கியுள்ளார்.
மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி, அம்ருதா ஸ்ரீனிவாஸ் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டனின் இசையமைப்பிலும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது.
ஜோ படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதனையடுத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற இருக்கிறது. விரைவில், இப்படத்திற்கான தலைப்பு மற்றும் டீசர், பாடல்கள் என அனைத்தும் அடுத்தடுத்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…