ஆடை படம் குறித்த விவாதத்திற்கு தயாரா? பிரபல இயக்குனர் ட்வீட்!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகையுமாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்.
இந்நிலையில், நடிகை அமலாப்பாலின் நடிப்பில் உருவாகி, நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்து வரும் ஆடை படம் குறித்து, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஆடை படத்துக்கு வாழ்த்துக்கள். படம் பார்த்தேன். உங்களுடைய கடின உழைப்பே ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. ஆடை படம் குறித்த ஆரோக்கியமான விவாதத்திற்கு தயாரா? உங்களிடமும், படத்தின் இயக்குனரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குனராக, நடிகராக அல்ல, ஒரு பெண்ணின் தாயாகவும், சாதாரண பார்வையாளராகவும்” என பதிவிட்டுள்ளார்.
.@Amala_ams hi dear, congrats on #Aadai , watched the film, your hard work shows on every frame???? are you open to healthy debate? I have a few questions to you & the director:) just as an audience, a woman and a mother of Girls, not as a film maker / actor ????
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 21, 2019