30-ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி..ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் டாப் நடிகை..! யார் தெரியுமா..?
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக லால் சாலம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது.
இந்த லால் சலாம் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, “லால் சலாம்” படத்தில் ரஜினிக்கு தங்கையாக 1980 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜீவிதா ராஜசேகர் நடிக்க உள்ளாராம்.
மார்ச் 7-ஆம் தேதி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள நிலையில், அன்று தான் ஜீவிதா ராஜசேகர் படக்குழுவினருடன் இணைய உள்ளார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள ஜீவிதா ராஜசேகர், 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார்.