ராட்சசன் ரிமேக் படம் அனுபமாவிற்கு கைக்கொடுக்குமா
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “கொடி” படத்தில் நடித்துள்ளார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
தமிழில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த “ராட்சசன் ” படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் தெலுங்கு ரிமேக் படமான “ராட்சஷகுடு” படம் தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அனுபமா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் கண்டிப்பாக கைகொடுக்கும் என்று இவர் தற்போது எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்.