முட்டாள் மனிதனை நம்புவது பயமா இருக்கு! ரஷ்மிகா பதிவு இணையத்தில் வைரல்!

ராஷ்மிகா மந்தனா : நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியது இல்லை என்றே கூறலாம். அடிக்கடி, சமூக வலைத்தளங்களில் தன்னிடம் கேள்வி கேட்க கூறி அதற்கு பதில் அளித்து வருவார். அப்படி இல்லை என்றால் சமூக வலைத்தளங்களில் தான் பதில் அளிக்கும் வகையில் எதையாவது பார்த்தால் உடனடியாக பதில் அளித்து விடுவார்.
அப்படி தான் இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்து இருக்கிறார். ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் பேசும் வீடியோவையும், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு ட்ரிப்டி டிம்ரி நடித்த ஜோயா கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும் வீடியோவையும் சேர்த்து எடிட் செய்து வெளியீட்டு ‘ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா ” திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது = பயமாக இருக்கிறது.. அங்கேயும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.. அந்த மனிதர்களை நம்புவது =சிறப்பு” என கூறி பதில் அளித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Correction : trusting a stupid man = scary.. there are a lot of good men also out there.. trusting those men = special. ????????
— Rashmika Mandanna (@iamRashmika) June 13, 2024
மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025