பிரபல நடிகருக்கு ஜோடியாக இணையவிருக்கும் ராஷ்மிகா….!!! ஹீரோ யார் தெரியுமா….?
விஜய் தேவாரகொண்டா நடிப்பில், தெலுங்கு சினிமாவில் வெளியாகி பிரபலமான படம் கீதா விதம். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மிகா. இவருடைய நடிப்பால் பலரை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார்.
இந்நிலையில், ராஷ்மிகா தளபதி 63 படத்தில் நடிக்கவிருப்பதாக வதந்தியான தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இவர் ரெமோ பட இயக்குனர் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவிடம் தான் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
மேலும் இந்த படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.