விஜய்யுடன் செம குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா…வெளியானது ‘ரஞ்சிதமே’ வீடியோ பாடல்.!
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. குறிப்பாக ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போடா வைத்தது என்றே கூறலாம்.
படம் வெளியாகி பல நாட்கள் ஆகியும் பலரும் இதனுடைய வீடியோ பாடல் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது ரஞ்சிதமே வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பாடலை பார்த்து வருகிறார்கள்.
Here is #CHARTBUSTER #Ranjithame#SenstionalRanjithame VIDEO SONG ????#BlockBusterVarisu ????
That grace in singing as well as Dance ????@actorvijay Anna At his toppest Form ????????This Celebration is Unstoppable
Here it is ????????????????????????????— thaman S (@MusicThaman) February 6, 2023
வீடியோவில் விஜய் மற்றும் ரஷ்மிகா இருவரும் செம நடனம் ஆடுகிறார்கள். எனவே விஜயின் நடனத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் 46 வயதில் இந்த மனிதர் எவ்வளவு அழகாக ஆடுகிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.