ஒரே வீட்டில் தீபாவளியை கொண்டாடிய ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா? மீண்டும் சீண்டிய நெட்டிசன்கள்…
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியைக் கொண்டாடி ராஷ்மிகா வெளியிட்டுள்ள போட்டோவும் தேவரகொண்டா வெளியிட்டுள்ள போட்டோவும் ஒரே வீட்டில், ஒரே பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது மற்றொரு வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே, விஜய் தேவரகொண்டாவும் – ராஷ்மிகா மந்தனாவும் பல இடங்களில் அதாவது, ஹோட்டல்கள் முதல் விடுமுறையை கழிக்கும் வெளிநாடுகள் வரை ஒன்றாகவே காணப்படுகிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலனாகவும் காதலியாகவும் இருக்கலாம் என்று தொடர்ந்து கிசுகிசுப்புகள் இருந்து வருகிறது.
இருப்பினும், இருவரும் தங்கள் காதல் உறவுகள் குறித்து கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இன்னும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைய ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த ஆண்டு தீபாவளியை இருவரும் ஒன்றாக கொண்டாடியதாக கூறப்படுகிறது. அதற்கான சாத்திய கூறுகளையும் நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகா டேட்டிங்? ஹோட்டலில் வசமகா சிக்கிய வைரல் வீடியோ.!
அதாவது, நேற்று முன் தினம் தீபாவளியை முன்னிட்டு, விஜய் தேவரகொண்டா தன் குடும்பத்துடன் தனது இல்லத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதே நேரத்தில், ராஷ்மிகா மந்தனா தனது சமூகவலைதளத்தில், தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க, புடவையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார்.
View this post on Instagram
இவர்கள் இருவருமே தங்கள் பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், “Happy Diwali my loves” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை கவனித்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களில் பின்னணியில் உள்ள வெளிப்படையான ஒற்றுமையைக் கண்டு பிடித்து இருவரும் ஒன்றாக தீபாவளியைக் கொண்டாடியிருக்கலாம் என்று யூகிக்க தொடங்கினர்.
View this post on Instagram
ஆம், இது விஜய் தேவரகொண்டா இல்லம் என்றும், இருவரின் புகைப்படத்திலும் ஒரே மாதிரியான சுவர் இருப்பதை கருத்தில் கொண்டு இரண்டு புகைப்படங்களையும் வைரலாக்க தொடங்கினர். இதற்கு முன்னதாக, வெளிநாட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரும் ஒன்றாக நீராடிய புகைப்படத்தை வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.
#RashmikaMandanna #vijaydevarakonda #Tiger3Diwali2023 pic.twitter.com/HsFvfDz422
— ndhi_ni_lolli (@ndhi_ni_lolli) November 13, 2023