சினிமா

ரொம்ப அச்சுறுத்தலா மாறிடும்! ராஷ்மிகாவுக்கு நடந்த சம்பவத்தை பார்த்து பயந்த மஞ்சிமா மோகன்!

Published by
பால முருகன்

நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கழுத்திற்கு கீழே கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு சென்றது போல வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா இல்லை அது AI தொழில் நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரிய வந்தது. ஆனால், அச்சு அசலாக அந்த வீடியோவில் இருக்கும் முகம் ராஷ்மிகாவை போல இருந்தது.

இதன் காரணமாகவே இப்படியா உடை அணிந்து செல்வது என ராஷ்மிகாவுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். பிறகு, நடிகர் அமிதாப் பச்சன் இது முற்றிலும் எடிட் செய்யப்பட்ட வீடியோ இதனை பதிவு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பிறகு ராஷ்மிகாவும் இதற்கு விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், ஒரு நடிகையின் முகத்தை இப்படி வைத்து மார்பிங் செய்து வீடியோ வெளியிட்டது குறித்து பல பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து  வருகிறார்கள். குறிப்பாக நாகசைதன்யா, சின்னமையி,  கே.கவிதா உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை மஞ்சிமா மோகன் “ராஷ்மிகாவுக்கு நடந்த இந்த சம்பவம் மிகவும் பயமாக இருக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் இது எதிர்காலத்தில் பெரிய அச்சறுத்தலை ஏற்படுத்தும்” என கூறிள்ளார்.

மேலும்,தனது மார்பீங் வீடியோ குறித்து விளக்கம் கொடுத்த ராஷ்மிகா ” ஆன்லைனில் பரப்பப்படும் அந்த மார்பீங் வீடியோவைப் பற்றி பேசும்போதே ரொம்ப வேதனையாக இருக்கிறது. நான் ஒரு நடிகையாக இருந்ததால் என்னால் இந்த பிரச்சனையை இப்போது சமாளித்து விட முடிகிறது. இதுவே நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது இப்படியானால் நடந்திருந்தால் என்னால் எப்படி சமாளித்து இருக்க முடியும் இரு கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த மாதிரி முகம் மற்றும் தொழில் நுட்பத்தால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன்பு இதனை பற்றி மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…

8 minutes ago

அடுத்த போட்டியில் இதை பன்னாதீங்க! ஆர்சிபிக்கு அட்வைஸ் கொடுத்த கேன் வில்லியம்சன்!

பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…

16 minutes ago

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா – தவெக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.?

சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…

26 minutes ago

இனிமே இவ்வளவு வரி கொடுக்கணும்! டோனால்ட் டிரம்ப் அதிரடி…யாருக்கு அதிகமான வரி?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…

56 minutes ago

வரியை தூக்கி போட்ட டிரம்ப்.! இந்தியா என்ன போகிறது.? சாதகமா..? பாதகமா..?

டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…

1 hour ago

வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…

2 hours ago