அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தில், கீதாஞ்சலியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அனில் கபூரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிறகு, ராஷ்மிகாவின் போஸ்டரை இன்று பகிர்ந்துள்ளனர். முதல் பார்வை போஸ்டரில், ராஷ்மிகா சிவப்பு மற்றும் வெள்ளை நிற செக்கப் புடவையில் குறைந்த மேக்கப் உடன் அழகாக தோற்றமளிக்கிறார்.
இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
கடைசியாக தமிழில் வாரிசு திரைப்படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் மிஷன் மஜ்னு என்ற படத்திலும் நடித்திருந்தார். இரண்டுமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, ரெயின்போ மற்றும் புஸ்பா படத்திலும் நடித்து வருகிறார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…