அந்த காட்சியில் நடிக்கும் போது கண் கலங்கி அழுதேன் – ராஷ்மிகா மந்தனா வேதனை!

animal movie rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தில் நடித்த எல்லாருடைய கதாபாத்திரமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் அனிமல் படம் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்த நிலையில், அனிமல் திரைப்படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அனிமல் படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு மக்களுக்கு முதலில் நான் நன்றியை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் நான் அழுதுவிட்டேன்.

லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது – விஷால் குற்றச்சாட்டு!

படத்தில் ஒரு காட்சியில் நான் ரன்பீர் கபூரை கன்னத்தில் அறைவது போல ஒரு காட்சி வரும் அந்த கட்சியில் நான் நடிக்கவே முதலில் தயங்கினேன். பிறகு இயக்குனர் என்னிடம் ஒரு மனைவி அந்த சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்வாளோ அதேபோலவே நடிக்கவேண்டும் என்று கூறினார். பின் படத்தினுடைய தாக்கத்தை புரிந்துகொண்டு அந்த காட்சியில் நடித்தேன்.

பிறகு அந்த காட்சியில் ஒரே டேக்கில் எடுத்துமுடித்தோம். காட்சி முடிந்ததும் என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. ரன்பீர் கபூரை அறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை காட்சியில் நடித்து முடித்த பிறகு ரன்பீர் கபீரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நன்றாக இருக்கீறீர்களா என்று கேட்டேன்” எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்