நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால், இன்னும் மலையாளத்தில் ஒரு படத்தில் கூட ஹீரோயினாக நடிக்கவில்லை. அவர் மலையாளத்தில் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும், இரண்டு நடிகர்களுடன் இணைந்து நடிக்க தனக்கு ரொம்பவே ஆசை இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா தனக்கு 2 நடிகர்களுடன் நடிக்க ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா ” எனக்கு மலையாள சினிமாவில் படங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறது. பஹத் பாசில் கூட ஒரு படத்தில் நடிக்கவேண்டும். அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். கும்பளங்கி நைட்ஸ் படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்களை வைத்தே அவர் அந்த அளவிற்கு நடித்து வருகிறார் என்றால் சாதாரண விஷயமே இல்லை.
காதலர் நடனத்தை பார்த்து அசந்து போன அதிதி ராவ்! சித்தார்த் மேல ரொம்ப பாசம் தான்!
எனவே, அவருடன் எனக்கு ஒரு படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. அவரை போலவே எனக்கு துல்கர் சல்மானுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. விமானத்திற்காக காத்திருந்த போது ஒருமுறை அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் நடிக்கும் படங்களும் எனக்கு பிடிக்கும் சீதாராமன் படத்தில் அவருடன் நடித்திருந்தேன். ஆனால், ஹீரோயினாக ஒரு படத்தில் அவருடன் நடிக்க ஆசை இருக்கிறது” எனவும் நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை ராஷ்மிகா அனிமல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…