அந்த விஷயத்துல ராஷ்மிகாவுக்கே பிரச்சனை இல்லை..உங்களுக்கு என்ன? சல்மான் கான் ஆவேசம்!
நான் ராஷ்மிகா மட்டுமில்லை அவருடைய மகளுக்கு கூட ஜோடியாக நடிப்பேன் என சல்மான் கான் ஆவேசத்துடன் பேசியுள்ளார் .

சென்னை : நடிகர் சல்மான் கான் இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்கிற தகவல் வந்தவுடன் எழுந்த ஒரே விமர்சனங்கள் என்னவென்றால் சல்மான் கானை விட ராஷ்மிகாவுக்கு 31 வயதுகள் அதிகம் எப்படி ஜோடி செட் ஆகும் என்பது போல விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால், படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை பார்க்கும்போது இருவருடைய ஜோடி நன்றாக தான் இருக்கிறது என ரசிகர்களும் கூறினார்கள். அது மட்டுமின்றி வயது ஆனாலும் சல்மான் கான் வயதானவர் போல தெரியவில்லை பிறகு எதற்காக இப்படி விமர்சனம் செய்கிறீர்கள் என்பது போலவும் சல்மான் கானுக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சூழலில், இந்த விமர்சனங்கள் குறித்து சல்மான் காணுமே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இது குறித்து சிக்கந்தர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சல்மான் கான் ” நானும் ராஷ்மிகாவும் இந்த படத்தில் ஒன்றாக நடிக்கும்போது அவருக்கும் எனக்கும் 31 வயது வித்தியாசம் இருக்கிறது என சொல்லி சிலர் விமர்சனம் செய்தார்கள். நானும் அவரும் நடிப்பதில் அவருக்கோ அல்லது அவருடைய தந்தைக்கோ கூட பிரச்சினை இல்லை..சிலருக்கு தான் அதில் பிரச்சினை இருப்பது தெரிகிறது.
நான் ராஷ்மிகா மட்டுமில்லை அவருடைய மகளுக்கு கூட ஜோடியாக நடிப்பேன் அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?” என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து பேசிய சல்மான் கான் ” ராஷ்மிகா இந்த படத்தில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார். நிச்சியமாக அவருக்கு இந்த படம் பெரிய பிரமாண்ட படமாக அமையும். இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் புஷ்பா படத்திலும் அவர் நடித்தார். மாற்றி மாற்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு கடினமாக வேலை செய்தார். அவருக்கு இந்த படம் பெரிய வரவேற்பை கொடுக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” எனவும் சல்மான் கான் தெரிவித்தார்.