விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகா டேட்டிங்? ஹோட்டலில் வசமகா சிக்கிய வைரல் வீடியோ.!
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சமீபகாலமாக டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக இந்த புத்தாண்டு அன்று இருவரும் மாலத்தீவிற்கு தனித்தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது.
இதன் காரணமாகவே ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் டேட்டிங் செய்து வருவதாகவும் பலர் கூறினார்கள். இருவரும் பலமுறை டேட்டிங் செய்வதை மறுத்தாலும், அவர்கள் குடும்பத்துடன் தொடர்ந்து சந்திப்பது டேட்டிங் வதந்திகளை தூண்டுகிறது.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் நண்பர்களுடன் அட்ராசிட்டி செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு ஹோட்டலில் இயக்குனர் கௌதம் தின்னனுரி, ஆனந்த் தேவரகொண்டா மற்றும் ஷெர்யா வர்மா ஆகியோர் இருக்கின்றனர். அதில், விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஒன்றாக பேசி மகிழ்வதை காண முடிகிறது.
View this post on Instagram
இருவரும் ஒன்றாகக் காணப்படுவது இது முதல் முறை அல்ல. பல முறை இருவரும் ஒன்றாக விடுமுறை மற்றும் விமான நிலையத்தில் தோன்றுவது முதல் இரவு உணவு வரை செல்வது எப்போதும் ரசிகர்களை கவனத்தை ஈர்க்கிறது. இருப்பினும் அவர்கள் ” நாங்கள் நல்ல நண்பர்கள்” என்று கூறி வருகின்றனர்.