ஜிங்குனமணி கிட்ட வாடி.! வைப் செய்த ராஷி கண்ணா…வைரல் புகைப்படம்.!
நடிகை ராஷி கண்ணா தற்போது, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது நடிப்புத் திறனுக்காக சிறிய காலத்திலயே ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.
2013ல் ஷூஜித் சிர்கார் இயக்கிய “மதராஸ் கஃபே” என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் ராஷி கண்ணா நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், அது அவரது விமர்சனப் பாராட்டைப் பெற்றது சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கடைசியாக தமிழில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பிரபல தனியார் ஊடக ஒன்றில் விருது வழங்கும் விழாவிற்கு கெஸ்டாக நடனமாடியுள்ளார்.
View this post on Instagram
அங்கு நடனம் ஆடிய காட்சிகள் பயிற்சி பெற்றுக்கொண்ட காட்சிகளையும் ஒன்று சேர்த்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த நடனத்திற்காக அவர் அணிந்திருக்கும் உடை ஜில்லா படத்தில் வரும் ‘ஜிங்குனமணி’ பாடலில் வரும் உடை போல் காட்சியளிக்கிறது. இதோ அந்த புகைப்படங்கள்…