நடிகை ராஷி கன்னாவின் அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ராஷி கன்னா தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அயோக்யா, சங்கதமிழன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் பல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மாதம் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வேல்ட் ஃபேமஸ் லவ்வர். இந்த படத்தை கிராந்தி மாதவ் இயக்கினார். மேலும், இவருடன் விஜய் தேவரகொண்டா, கேத்ரின் தெரசா , ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல் லைட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. மேலும் பல படங்களில் பிசியாக இருக்கிறார் ராஷி கன்னா.
இந்த நிலையில், இவர் மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோல்டன் உடையில் ஜொலிப்பதை போன்று ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…