ராஸ்கல்ஸ் 200 அடிச்சிருக்கலாம்… இந்தியா தோல்வி குறித்து மேடையில் வருத்தப்பட்ட மிஷ்கின்.!
டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் 16-ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் சோகத்தில் இருந்தனர்.
அந்த வகையில், இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கழக தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இந்தியா தோல்வியடைந்ததை பற்றி பேசியுள்ளார். அதில் மிஷ்கின் பேசியது ” ஒரு பெரிய ஷாக் இந்தியா தோல்வியடைந்தது.
இதனால் நேற்று நான் மிகவும் சோர்வாகிவிட்டேன். நல்லாத்தான் விளையாடினார்கள் , ராஸ்கல்ஸ் ஒரு 200 ரன் அடிச்சிருந்தா ஜெயிச்சிருக்கலாம். ஆனால் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் கூட விடாமல் நம்மளை ஜெயிச்சுவிட்டார்கள். கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.
இதையும் படியுங்களேன்- என் டி-ஷர்ட்டிற்குள் ஒருத்தன் கை விட்டுட்டான்.! ஆண்ட்ரியாவுக்கு நடந்த ‘அந்த’ சம்பவம்.!
பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு போறோம் என்று புத்துணர்ச்சி வந்துவிட்டது. திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்துவதாக உதயநிதி ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் வருடத்தில் 100 நாட்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். அவர் இயக்குனர்களின் நடிகர்” என்றும் பேசியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.