22 வயது ராப் பாடகர் பிக் ஸ்கார் காலமானார்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Default Image

பிரபல ராப் பாடகரான  பிக் ஸ்கார்  அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 22. 

அமெரிக்காவின் ராப் பாடகர் 22 வயதான பிக் ஸ்கார் நேற்று காலமானார். இவர் இறந்ததற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இவர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக செய்தி தரப்பில் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றார்கள்.

பிக் ஸ்கார் இறந்த துக்க செய்தியை மற்றோரு  ராப் பாடகராண குஸ்ஸி மானே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் இஸ்டாகிராமில் பிக் ஸ்காருடன் படும்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு கூறியதாவது ” இது வலிக்கிறது நான் உன்னை மிஸ் செய்கிறேன்” என உருக்கத்துடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gucci Mane (@laflare1017)

மறைந்த  ராப் பாடகர் பிக் ஸ்கார் SoIcyBoyz, Anotha 1, MJ (feat. Quezz Ruthless) உள்ளிட்ட பல ஹிட் ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். இவரது திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதனையடுத்து, சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்