ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவு.. நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!
பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்ஹாசன் நேற்றிரவு காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு இன்று சென்னையில் நடக்கிறது. ராம் சிங்ஹாசனின் திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
என் திருத்தகப்பனார் ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா @ ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று, வைகுண்ட ஏகாதசி, திங்கள் கிழமை, மார்கழி 18, 02.01.2023 இரவு 9:45 மணிக்கு ஆசார்யன் திருவடி அடைந்தார். அன்னாரது காரியங்கள் சென்னையில் செவ்வாய் கிழமை நடைபெற இருக்கின்றன.
– அடியேன் R Rangaraj Pandey pic.twitter.com/SPsJwBWswI— R Rangaraj Pandey (@RangarajPandeyR) January 2, 2023
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே வீட்டிற்கு நேரில் சென்று ராம்சிங்ஹாசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து சென்றுள்ளார்.
தலைவர் அவர்கள் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் ????#Rajinikanth#ThalaivarForLife #Superstar pic.twitter.com/Tm9mWSMmcT
— SUNDAR MAHALINGAM (@CHINTU4500) January 3, 2023