கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை நடிகைகள் பலர் கடுமையாக விமர்சித்த வந்தனர்.
இதில் பலர் தங்கள் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். ரம்யா நம்பீசன்னும், அதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பின் தனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இது கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம் .
இதனிடையே கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ரம்யா நம்பீசன் “நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்தேன் அதனால் எனக்கு பிரச்சினைகள் வருகின்றன.
புதிய படங்களில் நடிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலை இங்கு நிலவி வருகிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர். படப்பிடிப்பில் தொல்லை கொடுக்க கூடியவர் ரம்யா நம்பீசன் என்று என்னை பற்றி அவதூறு பரப்பியும் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்” என்றார் ரம்யா நம்பீசன்.சினிமாவிலும் அரசியல் உள்ளது போலத்தான் தெரிகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…