இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட ரம்யா பாண்டியன் குறித்து ட்வீட் செய்த பிரபல நடிகர்!

நடிகை ராமயா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தது மட்டுமல்லாமல், ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில், இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இந்த புகைப்படங்கள், படவாய்ப்பிற்காக எடுக்கப்படவில்லை என ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், ரம்யா பாண்டியன் குறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் மிளிர்ந்தார்.
தமிழை தாய்மொழியாக கொண்டு அதை சரியா உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.’ என பதிவிட்டு இந்த பதிவினை, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, இயக்குனர் சங்கர் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025