போட்டஸூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டதில் பல நடிகைகள் பிரபலமாகி இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் மொட்டைமாடியில் கவர்ச்சியாக போட்டஸூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனாலே, இவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது என்றே சொல்லலாம்.
இப்படி புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமானதை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியனுக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் இவர் டம்மி பட்டாசு என்ற படத்தில் மூலம் தான் அறிமுகமும் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து ஜோக்கர் என்ற படத்திலும் நடித்தார். பிறகு குக்வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த இரண்டு நிகழ்ச்சியுமே இவருக்கு பெரிய அளவிற்கு வெற்றியை கொடுத்தது என்றே சொல்லலாம். இதனாலே இவருக்கு மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இருந்தாலும், பட வாய்ப்புகளும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தாலும், ரம்யா பாண்டியன் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தாமல் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் குட்டி பாவாடை அணிந்துகொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.