ரேணுகாசாமி கொலை வழக்கு: சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை – ரம்யா கருத்து.!

Published by
கெளதம்

பெங்களூரு : கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டது குறித்து குத்து பட நடிகை ரம்யா கருத்து தெரிவித்துள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கில்  நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான ரேணுகா சுவாமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தர்ஷன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கன்னட நடிகர் தர்ஷன் தூக்குதீப் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா கருத்து தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “இங்கே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என யாருமில்லை. சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ரேணுகா சுவாமிக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை, யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. எக்காரணம் கொண்டும் மக்களை அடிக்கவோ கொல்லவோ முயற்சிக்காதீர்கள். நீதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற குழப்பம் இருந்தாலும், புகார் அளித்தாலே போதும். அதே பதிவில், கர்நாடக காவல்துறை அதிகாரிகளின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

கடமையைச் செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டும் மரியாதையும். இது நன்றியற்ற வேலை மற்றும் அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், சட்டம் மற்றும் நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

3 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

4 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

5 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

5 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

5 hours ago