நடிகை ரம்பா இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நடிகை ரம்பா விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதில் அவருடைய இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தன்னுடைய மகள் குணமடையவேண்டும் என நேற்று ரம்பா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் ‘என் சிறிய சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார் மோசமான நாட்கள் மோசமான நேரம் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் பிரார்த்தனைகள் நிறைய அர்த்தம்’ என பதிவிட்டுருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த வீடியோவில் ரம்பா பேசியதாவது ” அனைவருக்கும் நன்றி, நாங்கள் விரைவில் குணமடைய வேண்டிய அனைவருக்கும் மிகவும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நாங்க எல்லோரும் நலமாக இருக்கிறோம். சாஷா நலமாக இருக்கிறாள். நான் ரொம்ப கொடுத்து வச்சவ எல்லாரும் எனக்காக பிராத்தனை செய்றீங்க. எனக்கு சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் இல்லை என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…