ராக் ஸ்டார் இப்போ ஸ்டார்…..அடித்த அதிஷ்டம்….வரவேற்கும் ரசிகர்கள்…!!!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரமணியம்மாள். மேலும் ரமணி அம்மா  பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.ஆனால் பாட வேண்டும் என்ற ஆர்வமும்,துணிச்சலும் இவரை பாடாகராக்கியுள்ளது.

வேலை பார்த்து கொண்டே பாடல் நிகழ்ச்யில் கலந்து கொண்ட ரமணி அம்மா இந்த நிகழ்ச்சியில் பலரின் மனதை கவர்ந்ததோடு பாடுவதில் மனம் கவர்ந்தவராக வலம் வந்தார். மேலும் வெளிநாடுகள் எல்லாம் சென்று பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார். பாடி கொண்டே இடுந்த இவர் நடுவில் இவர் எங்கே போனார் என்று பார்த்த நேரத்தில் அவரை பற்றி ஒரு சுவையான தகவல் கிடைத்துள்ளது.

சீரியலான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் ரமணியம்மாள் நடிக்கிறாராம். அம்மா பாட்டை தாண்டி இப்ப நடிப்பு என்று மகிழ்ச்சி பொங்க கூறிய பாட்டி நடிப்பு எப்படி என்பது என்னுடைய காட்சிகள் வந்தால் தான் தெரியும் என சிரித்து கொண்டே கூறுகிறார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்