அந்த விஷயத்திற்கு முழு அனுமதி கொடுத்த காதலன்? உற்சாகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளார். இவர் சக நடிகரான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார். சில வருடங்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், காதலிக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்.
பரோலில் வரும் கைதி…’சைரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ…!!
அறிவித்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளும் தகவலும் சமீப நாட்களாக வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில்,இவர்கள் இருவருக்கும் வரும் வருகின்ற பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தீயாக ஒரு தகவல் பரவியது. அந்த தகவலை உறுதி செய்யும் வகையில், இவர்களுடைய திருமண பத்திரிகை வெளியாகி வைரலானது.
எனவே, இதன் மூலம் இவர்களுடைய திருமணம் பிரமாண்டமாக கோவாவில் நடைபெறும் எனவும் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, தனது காதலி ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஜாக்கி பக்னானி அனுமதி ஒன்றை கொடுத்துள்ளாராம். அது என்னவென்றால் ரகுல் ப்ரீத் சிங் திருமணம் முடிந்த பிறகும் நடிக்கலாம் என்று தான்.
பொதுவாக சில நடிகைகள் தங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றாலே சினிமாவில் இருந்து விலகி திருமண வாழ்வில் இணைவார்கள். ஒரு சிலர் தனது கணவர் சினிமாவில் நடிக்க அனுமதி தரவில்லை என்றால் நடிக்கமாட்டார்கள். ஆனால், தற்போது ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அவருடைய காதலர் திருமணம் முடிந்த பின்பும் நடிக்கலாம் என்று அனுமதி கொடுத்துள்ளதால் அவர் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.