நாளை மறுநாள் நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம்…இன்று நலங்கு விழா.!
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானியின் திருமண விழாவுக்கு முன், இன்று (நலங்கு விழா) ஹல்டி விழாவுடன் தொடங்குகிறது. திருமண முதல் நாள் நலங்கு வைக்கும் விழா என்று சொல்லப்படுகிறது. இது பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணத்திற்கு முன் தினம் நடைபெறும்.
அந்த வகையில், பாலிவுட் வட்டாரங்களின் ஒரு தகவளின்படி, கோவாவின் அரோசிம் கடற்கரைக்கு அருகிலுள்ள ஆடம்பரமான ஐடிசி கிராண்ட் என்ற இடத்தில, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நலங்கு வைக்கும் விழாவை நடத்துகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில், இருவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருவரும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி திருமணம் நாளை மறுநாள் (பிப்ரவரி 21 ஆம் தேதி) கோவாவில் நடைபெற உள்ளது. தனது திருமணத்தை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் பசுமையாக நடத்த ரகுல் திட்டமிட்டுள்ளார்களாம்.
அந்த விஷயத்திற்கு முழு அனுமதி கொடுத்த காதலன்? உற்சாகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
இதற்காக, அழைப்பிதழ் கூட டிஜிட்டல் முறையில் அடித்துள்ளனர், அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. குறிப்பாக இவர்களது திருமணத்தில் பட்டாசு, ஒலிபெருக்கி ஆகியவற்றிற்கும் அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இதனை மேற்பார்வையிட தனி டீம் ஒன்றையும் அமைத்துள்ளாராம்.