லியோவில் வன்முறை காட்சிகள்! லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய மனு!

lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், அந்த காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது ” லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தில் மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி ஆயுத கலாச்சாரமும், முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, உள்ளிட்ட பல வன்முறை காட்சிகளை வைத்து இருக்கிறார்.

அதைப்போல, படத்தில் பெண்களை கொள்ளும் காட்சிகளில் புகழ்ந்துரைக்கும் வகையில் உள்ளதாவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மனநிலையை உளவியலாளர் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்படங்களில் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார்.

லியோ படம் பார்த்து தான் மன உளைச்சலுக்கு ஆளானதால் அதற்காக ரூ1,000 வழங்க வேண்டும். லியோ திரைப்படத்தினை ஒளிபரப்பு செய்வதை தடை செய்யவேண்டும் அதற்கான உத்தரவையும் வழங்கவேண்டும் ” எனவும் ராஜூ முருகன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்