கணவரை பிரிந்தார் ராஜ்கிரண் மகள்! அழுதபடி வெளியிட்ட வீடியோ…
நடிகர் ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் பிரியா தனது கணவரை பிரிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ராஜ் கிரனின் வளர்ப்பு பிரியா, கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் முனிஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ராஜ் கிரனின் குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் முடிந்த பிறகு, கடந்த ஒன்றை ஆண்டு காலங்களில் பல நேர்காணங்களில் அவர்களது காதல் மற்றும் திருமணம் குறித்தும் பேசி வந்தனர். இந்த நிலையில், பிரியா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கணவரை பிரிந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டார்.
மேலும் அதில், தங்களது திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை என விளக்கமளித்துள்ள பிரியா, திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம். இந்த கல்யாணத்திற்கு பிறகு என்னை வளர்த்த அப்பாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன். என்னை வளர்த்தவர்களை காயப்படுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
என்னை மன்னித்து விடுங்கள் அப்பா : கணவரை பிரிந்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்.. #Rajkiran #Priya #Munishraja
— Tharani ᖇᵗк (@iam_Tharani) February 1, 2024
முன்னதாக, ராஜ்கிரண் தனது முகநூலில் பதிவு செய்தார் வளர்ப்பு மகளாக இருந்தாலும் தனது மகளாகவே அன்பு பாசம் காட்டி வளர்த்து வந்தேன் அவன் சொத்துக்காக நகைக்காக திருமணம் செய்து கொண்டதாக குற்றசாட்டுகளை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.