கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று நாளை வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஷங்கர் தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
உருவாகிறது இந்தியன் 3! கமல்ஹாசன் எத்தனை நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளார் தெரியுமா?
வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் என்பதால் அதனை முன்னிட்டு இந்தியன் 2 படத்திற்கான புது க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என புது போஸ்டர் ஒன்றை வெளியீட்டு லைக்கா நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து வீடியோ எந்த மாதிரி இருக்க போகிறது என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் சினிமாவில் போட்டி இருந்தாலும் கூட இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்றே சொல்லலாம். இதனை இருவருமே பல மேடைகளில் வெளிப்படையாகவே பேசி இருப்பார்கள். இந்த நிலையில், கமல்ஹாசனுக்காக ரஜினி ஒரு உதவி ஒன்றை செய்யவுள்ளார். அது என்னவென்றால் நாளை வெளியாகவிருக்கும் இந்தியன் 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தான் நாளை மாலை (நவ 3) 5.30 மணிக்கு வெளியிடுகிறார்.
தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு படங்களில் இந்தியன் 2 படமும் ஒன்று. எனவே, இப்படி இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை ரஜினிகாந்தே வெளியிடவேண்டும் என்று கமல்ஹாசன் விரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு நாளை படத்திற்கான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…