ரஜினி மகள் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை… முன்னாள் பணிப்பெண் கைது.!
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
சென்னையிலுள்ள அவரது வீட்டில் தங்கம், வைரம், நெக்லஸ்கள் உள்ளிட்ட சுமார் பல லட்சம் மதிப்புள்ள 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஐஸ்வர்யா, புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்த அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடியதாக முன்னாள் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 6 மாதத்திற்கு முன்பே வேலையைவிட்டு நின்றுவிட்டதாகவும், திருடிய நகைகளை விற்று, கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் பணமாக செலுத்தி சொத்து வாங்கியதாகவும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.