ரஜினி மகள் வீட்டில் திருட்டு…ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணம் பறிமுதல்…பணிப்பெண் கைது.!
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்கம், வைரம், நெக்லஸ்கள் உள்ளிட்ட சுமார் பல லட்சம் மதிப்புள்ள 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நேற்று சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடியதாக முன்னாள் பணிப்பெண் கைது செய்யப்பட்டார். இவர் 6 மாதத்திற்கு முன்பே வேலையைவிட்டு நின்றுவிட்டதாகவும், திருடிய நகைகளை விற்று, கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் பணமாக செலுத்தி சொத்து வாங்கியதாகவும் காலை போலீசார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, கைது செய்து அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த பணிப்பெண் திருடிய நகைகளை கொண்டு சோழிங்கநல்லூரில் சொகுசு வீடு வாங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இந்த திருட்டு சம்பவம் கடந்த 2019-ஆம் ஆண்டிலிருதே நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிறுக சிறுக அந்த அந்த பணிப்பெண் நகையை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திருட்டு வழக்கில் திருடியவரிடமிருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அவரை நீதி மன்ற காவலுக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.