rajinikanth and pa ranjith [file image]
PaRanjith : ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படும் வகையில் பா.ரஞ்சித் செய்த விஷயம் பேசும் பொருளாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படங்களை தொடர்ந்து பா. ரஞ்சித் அடுத்ததாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கிடையில், பா.ரஞ்சித் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் தொகுப்பாளர் ஒருவர் ‘நீங்கள் ரஜினியை வைத்து இரண்டு படங்களை இயக்கி இருக்கிறீகள். படத்தில் உங்களுடைய அரசியலை ரஜினியை வைத்து அவருடைய வாயால் சொல்லிவிட்டீர்கள் இருந்தாலும் நீங்கள் பேசிய அந்த அரசியல் ரஜினிக்கு புரிந்ததா?’ என சிரித்து கொண்டே கேட்டார்.
இந்த கேள்விக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில் கூறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அங்கு இருந்தவர்கள் சிரித்தது போல பா.ரஞ்சித்தும் சிரித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இப்படியா கேலியா சிரிப்பீர்கள்? என கொந்தளிக்க தொடங்கிவிட்டார்கள்.
ரஜினிகாந்த் ரசிகர்கள் “உங்களுக்கு ரஜினிகாந்த் பட வாய்ப்புகள் தரவில்லை என்றால் நீங்கள் இந்த நிலைமைக்கு வந்து இருக்கவே முடியாது எனவும் கொந்தளித்து கூறி வருகிறார்கள். பா.ரஞ்சித் சிரித்த இந்த விஷயம் பெரிய அளவில் பரபரப்பாக வெடித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…