ரஜினியின் 27 ஆண்டு சாதனையை முறியடித்த விஸ்வாசம்…!!
சினிமா வரலாற்றில் கடந்த 27 ஆண்டுகளாக வசூலில் முதலிடத்தில் இருந்து வந்த ரஜினி படத்தை அஜித்தின் விஸ்வாசம் முறியடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படமும் , சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் திரைக்கு வந்தது .
இந்த இரண்டு படத்தில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.அஜித்தின் விஸ்வாசமும் , ரஜினியின் பேட்ட படமும் வெற்றிப்படமாக இருந்தாலும் முதல் நாள் வசூலில் யார் முதலிடம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.
இதே போல 1992-ம் ஆண்டில் ரஜினி நடிப்பில் பாண்டியன் படமும், கமலின் தேவர் மகன் திரைப்படமு ஒன்றாக களம் கண்டன. பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் தேவர் மகன் முதலிடம் பிடித்தது.இதை அடுத்து தொடர்ந்து வசூலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமே இருந்து வந்தன.இந்நிலையில் ரஜினி படம் வைத்த 27 ஆண்டு சாதனையை அஜித்தின் விசுவாசம் படம் நிகழ்த்தியுள்ளது.
விஸ்வாசம் படம் இதுவரை வரை சுமார் ரூ.10 கோடி வசூலித்துள்ளது. பேட்ட திரைப்படம் இதுவரை சுமார் ரூ.9.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. தற்போதைய நிலவரம் படி அஜித்தின் விஸ்வாசம் படமே முன்னணியில் இருந்து வருகின்றது. வசூலுக்கான முழு விவரம் பொங்கல் முடிந்து 20- ம் தேதிக்குப் பிறகே தெரிய வருமென்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.