“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான்”புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொன்ன ரஜினிகாந்த்!

பாட்ஷா பட வசனத்துடன் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து கூறிய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Welcome2025

சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என பல்வேறு விதமாக 2025இன் முதல் நாளை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பபுத்தாண்டை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதைப்போல, நடிகர்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாட்சா படத்தின் வசனத்தை கூறி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் போட்டுள்ள பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் “தலைவர் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.. ”  என அவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்ததை தொடர்ந்து ரஜினியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூற அவருடைய வீட்டிற்கு முன்பும் ரசிகர்கள் கூடியிருந்தார்கள். அவர்களை பார்க்க வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களுக்கும் கைகளை அசைத்து புத்தான்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
anganwadi kerala shanku
TN CM MK Stalin speak in Tamilnadu Climate Change Summit 3.O
Shivam Dube Creates History
R Ashwin praise Himanshu sangwan
BJP MLA Vanathi Srinivasan
tamilnadu gold store purchsae