Vettaiyan: வேட்டையன் கெட்டப்பில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் போல் தெரிகிறது, போலீஸ் அவதாரத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழு நேற்று மீண்டும் தொடங்கினர்.
இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நெல்லை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நிறைவடைந்தது. படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் போலீஸ் உடையில் காரில் இருந்து இறங்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவரை பார்க்க வந்த ரசிகர்கள் அவரது காரைச் சூழ்ந்தனர், மேலும் அவர் காரில் இருந்து இறங்கியதும் அவரை உற்சாகப்படுத்தியதும் தெரிகிறது.
இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபோசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷ்ரா விஜயன், கிஷோர், ரோகினி, ராவ் ரமேஷ், ஷாஜி சென் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…