என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே! நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!

Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு லால்சலாம், வேட்டையன் ஆகிய படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி இருந்தது.

அதனை தொடர்ந்து, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது ” எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய முக.ஸ்டாலின்,  எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், அண்ணாமலை, சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கு நன்றி.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூல் செய்த படங்கள்!

நண்பர் கமலஹாசன், இளையராஜா, வைரமுத்து, .S.P.முத்துராமன், ஷாருக்கான் மற்றும் கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்.., சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்.., அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்” நன்றி.

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என தன்னுடைய நன்றிகளை தெரிவித்துவிட்டு உழைப்பு:-“பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்””உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்” எனவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால்சலாம் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்