எனக்கும் விஸ்வாசம் போல ஒரு ஹிட் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு இயக்குனர் சிவா, ‘ சார் உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.’ என கூறினார் என ரஜினிகாந்த் ஆச்சர்யத்துடன் குரல் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும் படத்தின் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றே கூறலாம். படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அண்ணாத்த திரைப்படம் எப்படி உருவானது அதற்கான பேச்சுவார்த்தை எப்படி ஆரம்பித்தது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஹூட்டி ஆப் மூலம் தனது குரலில் பதிவிட்டு பாகம்-1ஐ வெளியிட்டுள்ளார்.
பேட்ட ரிலீஸ் ஆன சமயம் பேட்ட எனக்கு மிகவும் பிடித்தது காரணம் அதில் கார்த்திக் சுப்புராஜ் என்னை இளமையாக ஸ்டைலாக காட்டியிருந்தார். அதே நாளில் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி இருந்தது. இரண்டு படமும் சூப்பர் ஹிட் ஆகி இருந்தது.
அதனால், விஸ்வாசம் திரைப்படத்தை பார்க்க விரும்பி தயாரிப்பாளரிடம் கேட்டேன் அவர் சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். விஸ்வாசம் படம் பார்த்தேன் முதலில் இந்த படத்தில் என்ன இருக்கிறது என்றவாறே பார்க்க தொடங்கினேன் படம் போக போக மிகவும் பிடித்துப்போனது. க்ளைமேக்ஸில் என்னை அறியாமல் கை தட்டிவிட்டேன். அப்போது இயக்குனர் சிவாவை அழைத்து பாராட்டினேன்.
அப்போது எனக்கும் ஒரு கதை இருந்தால் கூறுங்கள் படம் செய்யலாம் எனக்கும் இதே போல ஒரு ஹிட் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு அவர், ‘ சார் உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.’ என கூறினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். மற்ற இயக்குனர்கள் சரி சார் செய்துவிடலாம். என கூறுவார்கள் ஆனால் இவ்வளவு பாசிட்டிவாக ஹிட் கொடுப்பது ஈஸி சார் என கூறியது என்னை ஆச்சரியப்படுத்தியது என கூறினார். என அந்த பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா குறித்து கூறியுள்ளார். பார்ட் 2 குரல் பதிவு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…