தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், நிலமை மெது மெதுவாக சீராகி வருகிறது. இந்த சூழலில் டிவி பிரபலங்கள் நிவாரணம் தேங்கி நிற்கும் தணண்ணீரையும் பொருட்படுத்தாமல் களமிறங்கி உதவினர். சிலர் பணமாகவும், பலர் பொருளாகவும் மற்றும் உணவாகவும் கொடுத்து மக்களுக்கு கள பணியாற்றினர்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை தினமான இன்று, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் 20 வகை நிவாரண பொருட்களை 15 வாகனங்களில் அனுப்பிவைத்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் தினமான இன்று (12-12-2023), மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பாக 20 வகை நிவாரண பொருட்களை ரஜினி ரசிகர்கள் வழங்கி வருகின்றனர். அதே போல், அன்னதானமும் தற்போது பல இடங்களில் மன்றங்கள் சார்பாக நடந்து வருகிறது.
HBD Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தென்னிந்திய பிரபலங்கள் வாழ்த்து.!
இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா-கார்த்தி முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாணம் ரூ. 1 லட்சம், kpy பாலா ரூ.லட்சம் என பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…