திருப்பதியில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் சாமி தரிசனம்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ஆன்மீகத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு வந்துள்ளார்.
ரஜினிகாந்துடன் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார். திருமலையில் உள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய இவர், இன்று அதிகாலை மகளுடன் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையானை வழிபட்டார். பிறகு அவருக்கு பிரசாதமும் வழக்கங்கப்பட்டது.
ரஜினி கோவிலுக்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் அவர் கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் தலைவா…சூப்பர் ஸ்டார்…என கோஷம் போட்டு அந்த இடத்தில் கூடினார்கள். பிறகு செய்தியாளர்களும் ரஜினியை புகைப்படம் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து , செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி ” 6 வருடம் கழித்து ஏழுமலையானை தரிசனம் செய்தது திவ்ய அனுபவமாக இருந்தது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் தனது மகளுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களும்,வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.