விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன்! காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!
ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கழுகு கீழே வரும் போது காக்க அதனை தொந்தரவு செய்யும். ஆனால். கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதனுடைய உயரத்திற்கு காக்காவால் பறக்கவே முடியாது என்று கூறியிருந்தார். இவர் எதார்த்தமாக சொன்னது பெரிய அளவில் பேசும்பொருளாக வெடித்தது.
ரஜினிகாந்த் பேசியதை பார்த்த சிலர் விஜய்யை தான் ரஜினி காகம் என்று சொல்கிறார் என விமர்சிக்க ஆரம்பித்தனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் சண்டைபோட்டு வந்தனர். இது ஒரு புறம் இருக்க விஜய் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் காக்கா கழுகு என கூறிவிட்டு சிரித்தது இன்னும் பேசும்பொருள் ஆனது.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற லால் சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் பேசிய ரஜினிகாந்த் ” ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய காக்கா – கழுகு கதையை விஜய்யை தாக்கி பேசியதாக பலரும் தவறாக நினைத்துக் கொண்டார்கள். அது என்னை ரொம்பவே வேதனையடைய செய்தது. நான் எப்போதுமே அவரின் நலம் விரும்பிதான்.
கழுகு கழுகா தான் இருக்கு…காக்கா தான் கழுகாக முன்னேறிக்கிட்டு இருக்கு! – கே.ராஜன்
விஜய்க்கு போட்டி விஜய்தான். ரஜினிக்கு போட்டி ரஜினிதான் என்பதை இருவருமே பல மேடைகளில் சொல்லியிருக்கிறோம். விஜய் என் கண் முன்னால் வளர்ந்த பையன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பு விஜய்யின் வீட்டில்தான் நடந்தது. அப்போது விஜய்க்கு 13 ம் 14 வயது இருக்கும். முதலில் படிப்புல கவனம் செலுத்தவேண்டும் அதன்பிறகு நடிக்கலாம் ” என்று அவருக்கு அறிவுரை சொன்னேன்.
பின் நாட்களில் தன்னுடைய கடின உழைப்பால் நடிகனாகி உயர்ந்து ஒரு பெரிய இடத்தை பிடித்து இருக்கிறார். அரசியலுக்கும் வரவிருக்கிறார். நான் எனக்கு விஜய்தான் போட்டி என சொன்னால் எனக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். விஜய், எனக்கு ரஜினிதான் போட்டி என சொன்னால் அவருக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். ரசிகர்கள் மோதலை தவிர்க்கவும்” எனவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.