இமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்;தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்ன..??
ரஜினி கடந்த மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய ரஜினி செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை இனி வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், “காவேரி மேலாண்மை அமைப்பது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு இன்னும் அழுத்தம் தர வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், இமயமலை சென்றுவந்த பின்னர் புத்துணர்ச்சியாக உணர்கிறேன் என்றும் அவர் கூறினார்.