சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும், 170வது திரைப்படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் இயக்குவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வரும் வியாழக்கிழமை அன்று வெளியாக உள்ளது. செண்டிமெண்ட், ஆக்சன், கமர்சியல் படமாக உருவான அண்ணாத்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அண்ணாத்த திரைப்படமே இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வராமல் இருக்கிறது. இதனால், தலைவர் ரஜினி எப்போது அடுத்தபடம் பற்றி அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே வெளியாக தகவல்கள் படி,கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169வது படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. தற்போது வெளியான தகவலின் படி அது ஏறக்குறைய உண்மைதான் விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
அதற்கடுத்ததாக ரஜியினின் 170வது திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை. தனுஷ் கூறிய கதை ரஜினிக்கு பிடித்ததாகவும் அதனால், அந்த படத்தில் ரஜினி கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது.
முதலில் 169வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வரட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அதற்குள் ரஜினி தனது வழக்கமான பரிசோதனைகளுக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது. அவர் விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் இறைவனை வேண்டிக்கொள்கின்றனர்.
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை…
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன…