குடியரசு தின விழாவில் கதை சொல்ல காத்திருக்கும் ரஜினிகாந்த்.!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், தற்போது காரணம் கூறாமல் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது. அதன்படி, இருமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், பிப்ரவரி 9-ஆம் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. ஆனால், அப்பொழுது நடக்கவில்லை.
இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 26ம் தேதி (குடியரசு தினம்) சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என்று அதிகாரபொரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குட்டி ஸ்டோரி சொன்னது போல், இந்த முறை குடியரசு தின விழா அன்று கல்லூரியில் நடைபெற இருப்பதால் சற்று வித்தியசமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Celebration awaits! ????✨ Join us for the star-studded GRAND AUDIO LAUNCH EVENT of Lal Salaam this Friday, Jan 26 ????️ at Sri Sairam Institute of Technology, Chennai. ???? Get ready for another classic album from our ‘Isaipuyal’ AR Rahman & of course our Thalaivar’s Kutty Kadhai!… pic.twitter.com/600UiDCiD4
— Lyca Productions (@LycaProductions) January 23, 2024