Vijayakanth கேப்டன் விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் எந்த அளவிற்கு கெத்தாக இருந்தார் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். கண் முன்பு எதாவது தவறு நடந்தால் கூட உடனே தட்டிக்கேட்டுவிடுவார். அதனைப்போலவே, தனக்கு மனதிற்கு படும் விஷயங்களையும் விஜயகாந்த் வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவார். அந்த காலத்தில் எல்லாம் விஜயகாந்தை பார்த்தாலே பல நடிகர்களும் சற்று பயப்படுவார்கள் என்பதனை பல பிரபலங்களும் பேசி நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
அப்படி தான் ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் இருந்தபோது விஜயகாந்த் அங்கு கூட்டமாக காரில் சென்று இறங்கி ரஜினிகாந்திடம் பேச வந்தாராம். ஆனால், பேச வருவது முதலில் தெரியாமல் கூட்டமாக விஜயகாந்த் வந்ததும் ரஜினியே சற்று நடுங்கிவிட்டாராம். இந்த தகவலை பிரபல நடிகரான டெல்லி கணேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” யார் உரைக்க சத்தம் போட்டு முறைத்து பேசுகிறாரோ அவனுடைய இதயம் தான் சுத்தமா இருக்கும் உள்ளமும் நல்லா இருக்கும். அந்த குணம் எங்களுடைய கேப்டன் விஜயகாந்த் கிட்ட மட்டும் தான் இருக்கிறது. ஒரு முறை பாபா படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு சம்பவம் நடந்தது. அது என்னென்னா பாபா படத்தின் ஷூட்டிங் நடந்தபோது நாங்கள் அனைவரும் சிவாஜி கார்டனில் அமர்ந்து இருந்தோம்.
அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. காரில் இருந்து இறங்கி யாரோ ஒருவர் அடிக்க வருவது போல வரார் அது யாரும் இல்லை நம்ம கேப்டன் தான். அவர் அப்படி வந்ததை பார்த்தவுடன் ரஜினிகாந்த் பயந்துவிட்டார். கூட்டமாக வந்ததும் பயந்து போய் எங்களிடம் யார்…யார் என்று ரஜினிகாந்த் கேட்டார். பிறகு விஜயகாந்தை பார்த்ததும் ரஜினி வாங்க என்று கூறினார்.
நடிகர் சங்கம் சார்பில் சிங்கப்பூர் போறோம் நீங்க வரணும் கமல்ஹசன் வாராரு என்று விஜயகாந்த் கூறினார். விஜயகாந்த் ஒரு முறை தான் வாங்க என்று கூறினார். ஆனால், ரஜினிகாந்த் பலமுறை வருகிறேன் வருகிறேன் என்று பலமுறை கூறினார்” எனவும் டெல்லி கணேஷ் கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் தன்மான சிங்கம் எங்கள் கேப்டன் என்று கூறவருகிறார்கள்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…