சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாக இருக்கும் திரைப்பம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
இன்று இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் ஐஸ்வர்யாரஜினிகாந்த் பேசுகையில் தனது தந்தை ரஜினிகாந்த் பற்றி உருக்கமாக உரையாற்றினார் .
அவர் பேசுகையில், “நான் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் எனது குழுவினர், மக்கள் சமூகவலைத்தளத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை எனக்கு காட்டுகிறார்கள். சமீபகாலமாக, ‘சங்கி’ என்ற ஒரு வார்த்தையை மக்கள் தொடர்ந்து சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
அப்பாவை சங்கி னு சொல்லும் போது மனவேதனையும், கோவமும் வரும். இப்போ சொல்றேன் அவர் சங்கி கிடையாது. அவரை தவிர யாராலும் இந்த படம் நடித்திருக்க முடியாது. அவர் சங்கியாக இருந்திருந்தால் லால்சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். மனிதநேயம் இருக்கும் ஒருவரால் தான் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்க முடியும். அவர் மிகவும் மனிதாபிமானம் அதிகம் உள்ள மனிதர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என லால் சலாம் இசைவெளியீட்டு விழாவில் இயக்குனரும், ரஜினி மகளுமாகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…