ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய ரஜினிகாந்த்.! காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ…
ஒரு படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி அந்த பாடல் ஹிட் ஆனால், ரசிகர்கள் பலர் தங்களுடைய கை வண்ணத்தை காட்டி தங்களுக்கு பிடித்த நடிகர்களை வைத்து எட்டிட் செய்து அந்த வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு விடுவார்கள்.
அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினியை வைத்து எடிட் செய்த வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Adappaavingalaaa Aniyaya sync pandringale ???????????? pic.twitter.com/15GP6uVTnZ
— Sathish (@actorsathish) December 16, 2022
தளபதி படத்தில் ரஜினிகாந்தின் ராக்கம்மா கைய தொட்டு பாடலுடன், ரஞ்சிதமே பாடலை மெர்ஜ் செய்து இந்த இசைக்கு ஏற்றவாறு ரஜினியின் நடனம் இருப்பதால் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்,இந்த வீடியோவ “எப்படி எப்படியெல்லாம் யோசிக்காங்க” என காமெடி நடிகர் சதிஷ் அந்த வீடியோவை ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- உதயநிதிக்கு பதில் அந்த ஹீரோ சரியா இருப்பார்….கமல் போட்ட பக்கா மாஸ்டர் பிளான்.!
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.