அம்பானி இல்ல திருமண விழாவில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய ரஜினிகாந்த்.!
ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் நேற்று திருமணம் நடைபெறுற்றது. இந்த திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி வேட்டி சட்டையில், மணமக்களுடன் ஹிந்தி பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோ, ரஜினிகாந்த், அனில் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் அனந்த் அம்பானியின் இல்ல திருமண விழாவில் நடனமாடுவதைக் காட்டுகிறது.
#Rajnikanth and #AnilKapoor dancing away with #AnantAmbani at the latter’s wedding with #RadhikaMerchant today.#Trending pic.twitter.com/lkJNnFf4zf
— Filmfare (@filmfare) July 12, 2024
‘தில் தடக்னே தோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நாடனமாடிய ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானிக்கும் நேற்றிரவு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இன்றைய தினம் (ஜூலை 13-ம் தேதி) ‘சுப் ஆஷிர்வாத்’ மற்றும் ஜூலை 14-ம் தேதி ‘மங்கள் உத்சவ்’ அல்லது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மற்றொரு வரவேற்பு விழா ஜூலை 15-ம் தேதியும் மும்பையில் நடைபெறும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது.