ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி மக்களுக்கு மத்தியில் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.
இந்நிலையில் இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதன் காரணமாக படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விமர்சனங்களை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக படம் பெரிய வெற்றியை பெரும் என தெரிகிறது.
லால் சலாம்: 45 நிமிட கேமியோ ரோலுக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?
இதனையடுத்து, இன்று படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில். படம் வெற்றி அடைய தனது மகள் ஐஸ்வர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு ரஜினிகாந்த் சற்று எமோஷனலாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது ” என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…